Advertisement

திருமலையில் மழை வேண்டி ஐந்து நாள் யாகம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மழை வேண்டி, ஐந்து நாள் வருண ஜெபம் துவங்கப்பட்டுள்ளது. கோகர்ப்பம் தீர்த்தத்தில் துவக்கப்பட்ட இந்த யாகம் இங்குள்ள இதர நீர்நிலைகளிலும் தொடரும், ஒவ்வொரு நாளும் 8 மணி முதல் 12 மணி வரை இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் வேதகாலத்தில் நடத்தியது போல நடத்தப்படுவது இதன் சிறப்பாகும். ஒவ்வொரு பொருளும் கிருஷ்ணா வர்ண (கறுப்பு நிறம்) மாக இருக்கும். மூங்கில் அரிசி, குதிரை போன்றவைகள் பயன்படுத்தப்படும்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement