Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

புனர்பூசம்4ம் பாதம்: பெண்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மேம்படும். எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பர். வியாபாரிகள் பயணத்தின் போது சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். 2019 அக்டோபர் முதல் சட்ட விரோதமான, நிழல் வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் தண்டனை கிடைக்கும். சகோதர வகையில் நன்மை எதிர்பார்க்கலாம்.

பூசம்: இன்பமும் துன்பமும் கலந்த அனுபவம் கிடைக்கும். குடும்ப வாழ்வில் நெருக்கடியை சந்திக்கலாம். எனினும் அலுவலகப்பணியில் சிறந்த வெற்றிகளை அடைவீர்கள். அனாவசியமான செலவை தவிர்க்கவும். காதல் வாழ்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். 2019 அக்டோபர் முதல் வீண்வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பங்கு சந்தையில் இருந்து விலகுவது நல்லது தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு குறைவிருக்காது.

ஆயில்யம்: சிறப்பான நிதிநிலை அமையும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். செழிப்பான ஆண்டாக அமையும். 2019 அக்டோபர் முதல் சாதகமான காலம் ஆரம்பமாகும். அன்பால் வாழ்க்கைத்துணையுடன் விட்டுக் கொடுத்து போவீர்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தவும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement