Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா துவக்கம்

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா, புதன் கிழமை (ஜன.,10ல்)வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று சுவாமி சன்னதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில், கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்றத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத் திருவிழா ஜனவரி 21ல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் நா.நடராஜன் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement