Advertisement

மீனம்: வெற்றி வேண்டுமா போட்டு பாருங்க எதிர்நீச்சல்

எதிலும் முன்யோசனையுடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே!

சனிபகவான் ராசிக்கு 9-ம் இடத்தில் இருப்பதால் பகைவர் தொல்லை ஏற்பட்டிருக்கும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகியிருக்கலாம். இந்நிலையில் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் பின்னடைவு ஏற்படலாம். உடல் உபாதை அவ்வப்போது உண்டாகும். தடைகள் குறுக்கிட்டாலும், எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் முன்னேறுவீர்கள்.

குரு பகவான் ராசிக்கு 8-ம் இடத்தில் இருப்பது சாதகமானது அல்ல. பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதம்ஏற்படும். ஆனால், அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. இடையூறு குறுக்கிட்டாலும் அதை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். 2018 பிப். 14-ல் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவது நல்லது. மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது.

ராகு 5-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பானதல்ல. மனக்குழப்பம், வேதனை ஏற்படலாம். கேது 11-ம் இடமான மகரத்தில் இருப்பதால் ஆரோக்கியம் பெருகும். 2018 ஜனவரி – 2019 பிப்ரவரி குருபகவான், சனிபகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. சமூக மதிப்பு சீராக இருக்கும். கணவன், -மனைவி இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை தேவை. ஆனால் குருவின் 7-ம் இடத்து பார்வை மூலம், மந்த நிலை மாறும்.

தேவையான பொருட்களை வாங்கலாம். புத்தாடை அணிகலன் வாங்கலாம். 2018 பிப்.14-ல் குருபகவான், துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவரால் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தொழில், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பிப்.14 க்கு பிறகு பகைவர் சரணடையும் நிலை ஏற்படும்.

2019 பிப்.14-ல் கேது 10ம் இடத்திற்கு மாறுகிறார். உடல் உபாதை ஏற்படலாம். ராகு 4-ம் இடத்திற்கு மாறுகிறார். இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலும், பிரச்னை உண்டாகலாம்.

பணியாளர்கள் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பிப்.14 க்கு பிறகு திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும்.
அரசியல்வாதிகள், சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. பிப்.14க்கு பிறகு ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.
விவசாயிகள் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும்.

பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பிப்.14 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சீராக இருக்கும். 2019 மார்ச் – 2020 மார்ச் இந்த காலக்கட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு செல்கிறார். ஆனால் அவர் 2019 மே 19- முதல் அக். 27- வரை வக்ரம் அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நற்பலன் கிடைக்கும்.

புதிய வீடு, மனை வாங்க முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. மார்ச் 10க்கு பிறகு குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். குரு வக்ரகாலத்தில் முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் பணி கிடைக்கப் பெறலாம்.

தொழில், வியாபாரிகள் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். எப்போதும் அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்க அதிக முதலீட்டை தவிர்க்கவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். மார்ச் 10-க்கு பிறகு சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மார்ச் 10- க்கு பிறகு நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உறவினர் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உடல் நலம் சுமாராக இருக்கும்.

2020 ஏப்ரல் – டிசம்பர் குருபகவான் மகர ராசிக்கு வந்து நன்மை தருவார். அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை கிடைக்கும். தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.

இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னல் தந்து கொண்டிருந்தார். குடும்பத்தில் பகை ஏற்படுத்தியிருப்பார். ராகு 2020 ஆக.31-ல் 3-ம் இடத்திற்கு வருவதால் நன்மை அதிகரிக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம்,
குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சியை தருவார்.

2020 ஆக. 31-ல் கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.முயற்சியில் தடை ஏற்படும். பொருள் விரயம் ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மறைமுகப்போட்டி இனி இருக்காது. லாபம் படிப்படியாக உயரும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். பணியாளர்கள் சிறப்பான நிலை பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பாராட்டு, விருது போன்றவை கிடைக்க வாய்ப்புண்டு. 2020 ஜூலை 7- முதல் அக். 14- வரை வக்ரம் அடைகிறார். இந்த காலத்தில் வேலையில் பொறுமை தேவை.

கலைஞர்கள் தடையின்றி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்
அரசியல்வாதிகள், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். குருபகவானின் வக்ர காலத்தில் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம்.

பெண்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம்.

பரிகாரப்பாடல்

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு மணநாறு
மார்தங்கு தாளைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப் பண்டு எறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.

பரிகாரம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன் அபிஷேகம்
● பவுர்ணமியன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை

Download for free from the Store »

Advertisement
 
Advertisement