Advertisement

கும்பம்: வாசல் கதவை ராஜலட்சுமி தட்டுகிற நேரமிது!

பெருந்தன்மையால் பிறரை அரவணைக்கும் கும்ப ராசி அன்பர்களே!

சனிபகவான் கடந்த இரண்டரை ஆண்டாக இன்னல்களை தந்திருப்பார். உடல் உபாதை, தொழிலில் மந்த நிலையை கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு, குடும்ப கவுரவத்திற்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. இந்த நிலையில் சனிபகவான் 11-ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை உண்டாகும். லட்சுமி உங்கள் வாசலில் வரம் தர காத்திருப்பாள். பொன், பொருள் சேரும். தொழிலில் அமோக லாபம் உண்டாகும். தற்போது குரு பகவான் 9-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் மனதில் உற்சாகம் பிறக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குருபகவான் 2018 பிப்.14-ல் 10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது.

ராகு உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவிப்பார். தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். செயலில் அனுகூலத்தை கொடுப்பார். கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகரத்தில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. உடல் உபாதை உண்டாகலாம். 2018 ஜனவரி – 2019 பிப்ரவரி சனி, ராகுவால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் குறுக்கிட்ட தடை விலகும். 2018 பிப்.14க்கு பிறகு குருபகவான் மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். ஆனால் அவர் 2018 ஏப். 9- முதல் செப்.3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், - மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். 2018 பிப்.14க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். குருபகவானின் வக்ரகாலத்தில் சிலருக்கு பாராட்டு, விருது கிடைக்க வாய்ப்புண்டு. விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.

தொழில், வியாபாரத்தில் சனிபகவானால் வருமானம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.வருமானம் திருப்தியளிக்கும். 2018 பிப்.14க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். 2018 பிப்.14க்கு பிறகு ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. 2018 ஏப். 9- முதல் செப்.3- வரை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறலாம். சகவாச தோஷத்தால் பிரச்னைக்கு ஆளானவர்கள் விடுபட்டு நிம்மதி காண்பர்.

விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். 2018 பிப்.14க்கு பிறகு குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போகவும். 2018 ஏப்.9- முதல் செப். 3- வரை தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். கேதுவால் அவ்வப்போது உடல் நலக்குறைவு உண்டாகலாம்.

2019 மார்ச் – 2020 மார்ச் தற்போது ராகு, கடகத்தில் இருந்து மிதுன ராசிக்கும், கேது, மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகின்றனர். ராகு 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மை தர மாட்டார். மனைவி, பிள்ளைகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது, நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். அவர் 11-ம் இடத்திற்கு செல்வதால் செல்வ வளம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும்.

2019 மே 19- முதல் அக்.27- வரை குரு வக்ரம் அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை தேவைப்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி தாமதப்படலாம். உறவினர் வகையில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். புதிய வியாபார முயற்சி ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். மனைவி பெயரில் உள்ள தொழில் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்களால் உதவி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய பதவி கிடைக்கும். குருபகவானின் வக்ரகாலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேல்
அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை விடாமுயற்சியால் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். குரு வக்ரகாலத்தில் சற்று கவனம் தேவை.
விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வருமானம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நிம்மதியுடன் இருப்பர். சுய தொழில் செய்து வரும், பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தொழில் விரிவாக்க முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை திருப்தியளிக்கும். நாள்பட்ட நோய் கூட பறந்தோடும்.

2020 ஏப்ரல் – டிசம்பர் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். ஜூலை மாதத்திற்கு பிறகு உறவினர் வகையில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். அவர்களின் வருகையால் நன்மை காண்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், வீண் அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலருக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். குருபகவானின் வக்ரகாலத்தில் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். குரு வக்ரகாலத்தில் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். மானாவாரி பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். திட்டமிட்டபடி நவீன இயந்திரம் வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் விருந்து, விழா என சென்று மகிழ்வர். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

பரிகாரப்பாடல்

நம்பனே நவின்றேத்த வல்லார்கள்
நாதனே நரசிங்கம் அதனாய்
உம்பர் கோன் உலகம் ஏழும் அளந்தாய்
ஊழி ஆயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப காமகரி கோள் விடுத்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத்தானே
ஏழையேன் இடரைக் களையாயே.

பரிகாரம்
● சுவாதியன்று மாலையில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் விளக்கு
● சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேகம்

Advertisement
 
Advertisement