Advertisement

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) (தெய்வ அருளால் தொட்டது துலங்கும்)

சுறுசுறுப்புடன் பணியாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!

ராசிக்கு 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு, 9-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பின் தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால் முயற்சியில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். 4-ம் வீடான கும்பத்தில் இருந்த கேது, ஜூலை 27ல் 3-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். தெய்வ அருளால் தொட்டது எல்லாம் துலங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். ராசியில் இருக்கும் சனி பகவானால் தற்போது மனக்கவலை, உறவினர் தொல்லை, வெளியூர் வாசம் ஏற்பட்டிருக்கும். டிச.18-ல் அவர் 2-ம் இடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. 11ல் உள்ள குருபகவானால் பொருளாதார வளம் மேம்படும். செப்.1-ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு மாறுவதால் பணவிரயம் ஏற்படலாம். 2018 பிப். 13க்குப் பிறகு ராசிக்கு மாறுவது சிறப்பானது அல்ல. அவரது பார்வை பலத்தால் நன்மை காணலாம்.

இனி கால வாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் பொருளாதார வளம் மேம்படும். தடைகளை முறியடித்து செயலில் வெற்றி காண்பீர்கள். குருவால் நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. புதிய வீடு வாங்க அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுக வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் கேதுவால் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டாகும். சனி வக்ர காலம் என்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஆனால் அரசு வகையில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

பணியாளர்களுக்கு வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். ஆக.31-க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல் வாதிகள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். குரு பகவானின் பார்வையால் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயிகள் மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியம் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்களுக்கு தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

2018 ஜனவரி– 2019 பிப்ரவரி கேதுவால் பொன் பொருள் சேரும். உடல்நலம் மேம்படும். இறையருளால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். 2018 பிப். 13-க்கு பிறகு குருவின் பார்வை பலத்தால் புதிய வீடு, -மனை வாங்க யோகம் கூடி வரும்.

தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணியாளர்கள் உயர்ந்த நிலை அடைவர். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் வருமானம் குறையாது. அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். 2018 பிப்.13- க்கு பிறகு விண்ணப்பித்த கடனுதவி, கோரிக்கை கிடைக்கும். கலைஞர்கள் பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். கடந்த காலத்தில் இருந்த தடையனைத்தும் விலகும்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம். விவசாயிகள் சிறப்பான பலன் காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை பெறுவர். குடும்பத்தோடு அடிக்கடி புனித தலங்களுக்கு செல்வர்.

பரிகாரம்: சனியன்று அனுமனுக்கு நெய்தீபம் பவுர்ணமியன்று கிரிவலம் வருதல் செவ்வாயன்று முருகன் வழிபாடு.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement