கீழக்கரை: கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமக் கோயில்களின் உண்டியல்கள், தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை குறி வைத்து திருடும் மர்ம நபர்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயில் உடமைகளை பாதுகாப்ப தற்காக இரவுநேர ரோந்து பணியில் கிராமப்பகுதி மக்கள் ஈடு பட்டுள்ளனர். திருப்புல்லாணி அருகே பள்ள மோர்க்குளம் வையக்கிழவன் அய்யனார்
கோயில், காஞ்சிரங்குடி அய்யனார் கோயில், கொம்பூதி கண்ணபிரான் கோயில், ஏர்வாடி இதம்பாடல் கண்ணன் கோயில், உத்தரகோசமங்கை களரி சூரசம்ஹர மூர்த்தி கோயில், காரார் உடைய அய்யனார் கோயில், சுமைதாங்கி கிராமம் சேதுமா காளியம்மன் கோயில், கீழக்கரை இந்துபஜார் அரிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்து உண்டியல் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
இதுகுறித்து ஏர்வாடி, கீழக்கரை, உத்தரகோசமங்கை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்தும் தொடர்புடைய குற்றவாளி களை அடை யாளம் காணவும், அவர்களை கைதுசெய்து கொள்ளை போன பொருட்களை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. கொள்ளையர்கள் பெரும் பாலும் கிராமக் கோயில்களை குறிவைத்து கைவரிசை காட்டி வருவது பக்தர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ள மோர்க்குளம் தங்கராஜ் கூறுகையில்,“சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களால் எங்கள் கோயில் உண்டியலுக்கு ஆபத்து ÷ நரிட்டுள்ளது. இரவு நேரங்களில் ரோந்து சுற்றும் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை உண்டியல் கொள்ளையர்கள் த ங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். கிராமக்கோயில்களை குறிவைத்து கொள்ளையடிப்பதை தடுக்க எஸ்.பி., மயில்வாகனன் நடவடிக்கை எடுக்கவேண்டும், கீழக்கரை போலீஸ் ஸ்டேசனில் இரவு ரோந்து பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்,” என்றார்.