Load Image
Advertisement

கடகம் : கார்த்திகைராசி பலன்

புனர்பூசம் - 4: சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய உங்களுக்கு இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். ஏழாமிடத்தில் சனி பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம்: நவ.19, 20
அதிர்ஷ்ட தினம் டிச.10, 11

பூசம்: நிர்வாக திறமையும், குடும்ப பொறுப்பும் மிக்க உங்களுக்கு இந்த மாதம் பணவரவு இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். புதிய நட்புகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரவும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். அரசியல்வாதிகளுக்கு பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
சந்திராஷ்டமம்: நவ.20, 21
அதிர்ஷ்ட தினம் டிச.11, 12

ஆயில்யம்: மன உறுதியுடன் இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வீடு கட்டும் பணி தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கி டையே மகிழ்ச்சியான நிலை காணப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரவு திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம்: விநாயக பெருமானை வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.21, 22
அதிர்ஷ்ட தினம் டிச.12, 13

Advertisement
Advertisement
 
Advertisement