Load Image
Advertisement

மிதுனம் : கார்த்திகைராசி பலன்

மிருகசீரிடம் -3, 4: காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். அரசியல் துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.

சந்திராஷ்டமம்: நவ.17, 18; டிச.14, 15
அதிர்ஷ்ட தினம் டிச.7

திருவாதிரை: நியாமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர் களுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பொறுப்பான் பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
பரிகாரம்: முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டமம்: நவ.18, 19; டிச.15, 16
அதிர்ஷ்ட தினம்: டிச.8

புனர்பூசம் - 1, 2, 3: காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க பணவரவு கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.19, 20
அதிர்ஷ்ட தினம்: டிச.9, 10

Advertisement
Advertisement
 
Advertisement