Load Image
Advertisement

ரிஷபம் : கார்த்திகைராசி பலன்

கார்த்திகை - 2, 3, 4: தந்திரமாக எதையும் செய்யும் உங்களுக்கு இந்த மாதம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்தகாரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். மனோதிடம் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். அரசியல்வாதிகளுக்கு தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்கக் கூடும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குழப்பம் நீ்ங்கும். மனத்தெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

சந்திராஷ்டமம்: டிச.12,13
அதிர்ஷ்ட தினம் டிச.5

ரோகிணி: சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் உங்களுக்கு இந்த மாதம் சில நேரங்களில் ஏற்படும் திடீர் கோபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பீர்கள். உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கலைத்துறையினர் வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. அரசியல்வாதிகளின் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்களுக்கு சொல்வாக்கும் உங்களுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச.13, 14
அதிர்ஷ்ட தினம் டிச. 6

மிருகசீரிடம் - 1, 2: எதையும் திட்டமிட்டு செய்யும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்துமுடியும். வீண் அலைச்சல்கள் குறையும். செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக் கும். தொழில் விருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்னை குறையும்.

பரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ.17, 18; டிச.14, 15
அதிர்ஷ்ட தினம்: டிச.7

Advertisement
Advertisement
 
Advertisement