பழநி: பழநி முருகன் கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநில, வெளியூர் பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலை அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கிரிவீதி, சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு இருந்தது. மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல பக்தர்கள் காத்திருந்தனர்.