Load Image
Advertisement

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா

மயிலாடுதுறை: சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தெப்ப திருவிழா நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகி தாயருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement