Load Image
Advertisement

வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், வைகாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை சிவனாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டு செல்கின்றனர். வைகாசி மாத பவுர்ணமி திதி காலை, 10:53 முதல், நாளை காலை, 10:20 மணி வரை உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலினுள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். வெயில் தாக்கத்தால் பக்தர்கள் அவதிப்பட்ட நிலையில், கோவிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்ற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், இலவச மோர் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் மற்றும், 50 ரூபாய் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement