Load Image
Advertisement

திண்டிவனம் கெங்கையம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திண்டிவனம், திண்டிவனம் கெங்கையம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவில் பிரம்மோற்ச விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. அன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், மதியம் 1:00 மணிக்கு, சாகை வார்த்தல் நடந்தது. அன்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் நகர மக்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement