Load Image
Advertisement

பங்குனி பிரம்மற்சவம்: தங்கதேரில் திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் உலா

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில், நடந்து வரும் பங்குனி பிரம்மற்சவத்தை முன்னிட்டு, தங்கதேரில் பொன்னப்பர், புமிதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பிரம்மற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்கரதம் வடம் பிடித்தல் இன்று நடைபெற்றது. தங்கதேரில் பொன்னப்பர், புமிதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 21ம் தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், புஷ்பயாகமும், விடையாற்றியும் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement