Load Image
Advertisement

பரமக்குடியில் களை கட்டிய முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று களை கட்டிய நிலையில், இன்று காலை மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார்.

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு நகரில் உள்ள தெரு குடியிருக்கும் மக்கள், ஆட்டோ, தொழிலாளர்கள், வியாபாரிகள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் பூத்தட்டுகளை பரப்பி வைத்திருந்தனர். மேலும் இரவு ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 9:00 மணி தொடங்கி அனைத்து இடங்களிலிருந்தும் பூத்தட்டுகள் ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை அடைந்தனர். இன்று காலை மூலவர் அம்மன் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement