பழநி: பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இடும்பன் மலைக் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு இடும்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இடும்பன் மலை, பழநி மலைக் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இடும்பன் மலை கோயிலில் 15 அடி உயர இடுப்பன் சிலை, விநாயகர், முருகன், அகத்தியர் சிலைகள் உள்ளன. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு இடும்பன் சிலைக்கு 16 வகை அபிஷேகம், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்