Load Image
Advertisement

உறையூர் கமலவல்லி நாச்சியார் தெப்ப திருவிழா கோலாகலம்

திருச்சி : உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். பின் சிறப்பு அலங்காரம், அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடைபெற்று, இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் தாயார் எழுந்தருளி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று 18ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement