Load Image
Advertisement

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள முக்கடல் சங்கமத்தில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தை மாத பவுர்ணமியை முன்னிட்டு குமரி மாவட்டஇந்து திருத்தொண்டர் பேரவை நடத்தும் முக்கடல் சங்கமம் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது. பரசுராமர் விநாயகர் கோயில் முன்பக்தர்கள் திரண்டு இருந்தனர். பஞ்சசங்கு நாதம் ஒலிக்கமாதாபிதாகுரு ஆசி வேண்டல் குலதேவதை, இஷ்டதேவதை, கிராம தேவதை வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பிறகு அணையாதீபம் ஏற்றுதல் மற்றும் கையிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. சப்தகன்னிகள் அடியார்களுக்கு எதிர்சேவை நடந்தது. பின் சமுத்திர அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement