Load Image
Advertisement

மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். கடந்த சில மாதங்களாக உண்டியல்கள் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கூடுதலாக ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று ஏழு உண்டியல்கள் திறக்கப்பட்டு இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் ஏழு உண்டியல்களில் 44 லட்சத்து 43 ஆயிரத்து 243 ரூபாயும், 441 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைத்தன. கண்காணிப்பு பணியில் உதவி ஆணையர்கள் வில்வமூர்த்தி, செல்வராஜ், ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் வசந்தாள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். மீதமுள்ள எட்டு உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement