Load Image
Advertisement

காளஹஸ்தி சிவன் கோயிலில் (திருட்டு சம்பவம்) தோப்புற்சவம்

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயில் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்தும் வகையில் தோப்புற்சவம் (திருட்டு சம்பவம்) நடைபெற்றது .

ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் விலை மதிப்புள்ள ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும் திருடி சென்றதை தொண்டமான் சக்கரவர்த்தி மாறு வேடத்தில் வருவதோடு திருடர்களை பிடித்து மீண்டும் சுவாமி அம்மையார்களின் விலை மதிப்புள்ள ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும் ஒப்படைக்கும் சம்பவத்தையே ஒவ்வொரு ஆண்டும் தோப்புற்சவம் ஆக நிர்வகிக்கப்படுகிறது .அதன் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களின் (உற்சவமூர்த்திகளுக்கு) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு மங்கள வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 4 மாட் வீதிகள் அருகில் கொண்டு வந்தனர்.கோயில் அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி திருடர்கள் வந்து நகைகளை திருடிக் செல்ல முயற்சிக்கின்றனர் அவர்களை பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகையில் தொண்டமான் சக்கரவர்த்தி திருடர்களை விரட்டி பிடிப்பதுப் போல் கோயில் அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களின் கண்களை கவரும் வகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அம்மையார்களை தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement