Load Image
Advertisement

உறையூர் கமலவல்லி நாச்சியார் வைகுந்த ஏகாதசி விழா 11ம் தேதி தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 2வது தலமாகும். இத்தலத்தில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும். மிகவும் சிறப்பு பெற்றதான தாயார் கமலவல்லி நாச்சியார் மட்டுமே பரமபதவாசலை கடக்கும் வைகுந்த ஏகாதசி வைபவம் வரும் பிப்ரவரி 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.பிப்ரவரி 11ம் முதல் 15ம் தேதி வரை பகல்பத்து உற்ஸவம் நடக்கிறது. இந்த நாட்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்படுகிறது. 15ம் தேதியன்று முத்துக்குறி வைபவம் நடக்கிறது. அன்று முத்துக்குறி பாசுரத்திற்கான அபிநயம், வியாக்யானங்கள் அரையர்களால் சேவிக்கப்பட்டு இரவு 8.30 மணியளவில் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான பிப்ரவரி 16ந் தேதி மாலை பரமபதவாசல் திறக்கப்படுகிறது. அப்போது உற்சவர் தாயார் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இராப்பத்து நாட்களில் திருவாய்மொழித் திருநாட்களாக மாலை 5.00 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளி மாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. பிப்ரவரி 20ம் தேதி அன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய்மொழித் திருநாள் சாற்றுமறை நடக்கிறது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்வார்கள்.ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement