Load Image
Advertisement

ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

கார்த்திகை 2,3,4 : சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியனுடைய அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

உங்களின் சுய முயற்சியால் திட்டமிட்டதை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு ஊருக்கு சென்று வசிக்க நேரிடலாம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையான பலன்களைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உயர்ந்தோரிடம் பணிவுடன் நடந்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அதேநேரம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் சமயத்தில் தவறான கருத்தை மனமறிந்து சொல்ல வேண்டாம். உங்களின் ஆலோசனைகள் பலரை மாற்றும் காலகட்டம் இது.

உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உதவுவீர்கள். குரு, மகான்களின் ஆசி கிடைக்கும். நேர்முக சிந்தனை அதிகரிக்கும். அதேநேரம் உங்களைப் பற்றி தற்பெருமை பேசுவீர்கள். மறைமுக எதிர்ப்பு ஏற்படும். குழந்தைகள் உங்களின் சொல் பேச்சு கேட்காமல் நடந்துகொள்வார்கள்.

வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பாராமலேயே நடந்தேறும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே இருக்கும் பிரச்னைகளில் தலையிடாமல் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள். எதிர்வரும் சோதனைகள் தானாகவே விலகும்.

அவ்வப்போது உங்களின் தன்னம்பிக்கை குறையும். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை பயம் உண்டாகும். தொழிலை சிறப்பான முறையில் செய்வீர்கள். ஆனாலும் சகோதர, சகோதரிகளின் எதிர்ப்புக்கு ஆளாகலாம்.

பணியாளர்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது.

வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக் கடன் என நினைத்தது திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். அதேநேரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். நல்லவர்கள் கூட்டாளிகளாக அமைவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு இருந்தாலும் புதிய பொறுப்பை பெற முடியாது. அதேசமயம் உங்கள் மீதான வழக்குகள் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினருக்கு புகழோடு பணவரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கும். ரசிகர்கள் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

பெண்கள் தங்களின் எண்ணங்களை சிறப்புடன் செயல்படுத்துவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

மாணவர்கள் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடவும்.

பரிகாரம்: முருகன் வழிபாடு
+ நண்பரால் நன்மை
- முயற்சியில் தாமதம்

ரோகிணி: சனிபகவான் உங்களின் இருபதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.சுக்கிரன், சந்திரன் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடை ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.
மகிழ்ச்சிகரமான திருப்பம் ஏற்படும். கடுமையான பணிச்சுமை, உழைப்பு போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். மனபலம் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயல்களை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். உற்றார், உறவினர் மத்தியில் வளர்ச்சியடைவீர்கள். அவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு சொத்து சேரும். வில்லங்கமான வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறி தென்படும். அனைத்து செயல்களிலும் தனித்து இயங்கி வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வீர்கள். சரியான காரணமில்லாமல் தாமதமாகி வந்த வீட்டுக்கடன் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் மீது குற்றம் சாட்டிய நண்பர்கள் தங்கள் தவறை உணர்வர். சமுதாயத்தில் இழந்த மதிப்பு, மரியாதையைப் பெறுவீர்கள்.
தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். உற்சாகத்துடன் உழைப்பதற்கு மனதிற்குப் பிடித்தமான வேலை கிடைக்கும். சரளமான பணவரவைக் காண்பீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். அதேநேரம் எவரிடமும் வீண் வாக்கு வாதம் வேண்டாம். மேலும் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். போட்டிகளை சாதுரியத்துடன் சமாளிப்பீர்கள். சிறிய சந்தர்ப்பத்தையும் சிறப்பாக பயன்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய நெடுந்துாரப் பயணம் தவிர்க்கவும். பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.
பணியாளர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.
வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருந்தாலும் போட்டிகளை சந்திக்க நேரிடும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். கோபப்படும் தருணங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளை ஆலோசித்த பிறகே செய்யவும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் முக்கியப் பணிகளைக் கொடுக்கும். தொண்டர்களின் பாராட்டும் கிடைக்கும். கட்சிப் பணிக்காக சில புதிய பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவால் மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்களுக்கு கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் காண்பீர்கள். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தெய்வ பலம் அதிகரிக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பணவரவு சீராகவே இருக்கும்.

மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்கவும். பாடங்களை மனப்பாடம் செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு
+ அதிக பணவரவால் மகிழ்ச்சி
- மற்றவருடன் கருத்து மோதல்

மிருகசீரிடம் : னி பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.
கிரகங்களின் சஞ்சாரத்தால் பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் இணக்கம் ஏற்படும். கெட்டிக்காரர் என பெயரெடுப்பீர்கள். அனுபவ அறிவால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டாளிகள், நண்பர்களுடன் சண்டை சச்சரவு வராமல் பார்த்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன் அடைபடும். நவீன விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பழைய தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். முடியாது என நினைத்த காரியங்களை செய்யத் தொடங்குவீர்கள். மனித பலத்தைவிட தெய்வ பலத்தை நம்பி ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேண்டாத, விபரீத யோசனைகளில் இருந்து மனதை திசை திருப்புவீர்கள்.
அனைத்து விஷயங்களையும் முன்கூட்டி திட்டமிட்டு முடிப்பீர்கள். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். சகோதர, சகோதரிகளிடம் சகஜகமாகப் பேசி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தத் திட்டமிடுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தொழிலில் வீண் அலைச்சல் இனி இருக்காது. பழைய நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் லாபம் வரத் தொடங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புரியாத புதிராக இருந்தவர்கள் நேர்மையுடன் பழகத் தொடங்குவர். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்புக்கேற்ப லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்த போட்டிகள் நீங்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்
பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்ட ஊதிய உயர்வு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் நல்ல முடிவைக் காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு தடைகளுக்குப் பின் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்வீர்கள். சக கலைஞர்கள் உதவுவார்கள்.
பெண்களுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவருடன் ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். ஆரோக்யம் சீராக இருக்கும்.
மாணவர்கள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு

+ முயற்சியில் வெற்றி
- பணவிஷயத்தில் கவனம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement