அசரீரி ஒலித்தது! கை முளைத்தது!
காளஹஸ்தி என்னும் தலத்திலுள்ள சிவன் காளத்திநாதர். ஒருநாள் இவரது கண்ணில் ரத்தம் வழிந்ததைக் கண்ட சிவபக்தரான கண்ணப்பர். தன் வலதுகண்ணை அகழ்ந்து அப்பினார். பின் சுவாமியின் இடது கண்ணிலும் ரத்தம் வழிய, தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க முயற்சித்தார். ஆனால் சிவலிங்கத்தின் இடதுபாகத்தில் இருந்து வளையல் அணிந்த கை ஒன்று முளைத்தது. ‘நில்லு கண்ணப்பா!’ என்று அசரீரியும் ஒலித்து அவரை தடுத்தது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
சிவனின் இடதுபாகம் பார்வதிக்கு உரியது. பக்தர் துன்பப்படுவதைக் காண பார்வதியின் மனம் சகிக்கவில்லை. அதனால் தடுத்தாட்கொண்டாள். முக்கண்ணர் என்று சிவனை அழைத்தாலும் காளஹஸ்தியில் அருள்புரியும் சிவனுக்கு உரியது அரைக்கண் மட்டுமே. சிவனின் உடம்பில் சரி பாதி பார்வதி என்பதால், ஒன்றரைக்கண் அம்பிகைக்கு உரியது. காளத்திநாதரின் வலதுகண்ணோ பக்தரான கண்ணப்பர் கொடுத்தது. அதனால் நெற்றிக்கண்ணின் வலதுபாகமான அரைக்கண் மட்டுமே சிவனுக்குரியதாகும்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441