Load Image
Advertisement

அரவிந்தர் ஆசிரமத்தில் 96ம் ஆண்டு சித்தி தினம்

புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் 96ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், தங்கியிருந்த இருந்த மகான் அரவிந்தர், 1926 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை, உணர்ந்து, அதன்பின் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார். அதையொட்டி அந்த நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவ.24ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 96ம் ஆண்டு சித்தி தினமான இன்று, அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரம உறுப்பினர்களின் கூட்டு தியானம் நடக்கிறது. அதன் பின்னர் அரவிந்தர் வாழ்ந்த அறை பக்தர்கள் தரிசனத்துக்காக மதியம் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement