Load Image
Advertisement

மிதுனம் : கார்த்திகை மாத பலன்

மிருகசீரிடம் - 3,4:
எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் உங்களுக்கு இந்த மாதம் வீண் செலவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதப் போக்கு காணப்படும். மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் வருமானம் குறையாது. புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. பணியாளர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்படலாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. ண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. ஆனால் வீண்விரயம் தவிர்க்க முடியாததாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் பங்கேற்கும் போது விழிப்புடன் இருக்கவும். ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

பரிகாரம்: சரபேஸ்வரருக்கு ஞாயிறன்று வழிபட காரிய வெற்றி ஏற்படும்.
சந்திராஷ்டமம்:நவ. 26, 27
அதிர்ஷ்ட நாள்: டிச. 6
.
திருவாதிரை
அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமாக நம்புவீர்கள். இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதுாரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணியாளர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவர். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வர வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு நல்ல ன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். நற்செயலில் ஈடுபட்டு பாராட்டு காண்பர்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் செல்வம் பெருகும்.
சந்திராஷ்டமம்:நவ. 27, 28
அதிர்ஷ்ட நாள்: டிச. 7, 8

புனர்பூசம் 1, 2, 3:
எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் உங்களுக்கு இந்த மாதம் சுபபலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். பணியாளர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதுாறு பேசினால் கண்டு கொள்ளாமல் ஒதுங்குவது நல்லது. விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் திருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரவு கூடும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு சுபச் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க பிரச்னைகள் தீரும்.
சந்திராஷ்டமம்:நவ. 28, 29
அதிர்ஷ்ட நாள்: டிச. 8, 9

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement