Load Image
dinamalar telegram
Advertisement

துலாம் : புரட்டாசி மாத பலன்

சித்திரை - 3, 4:
சாதித்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்ட உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். அனைத்திலும் யோக பலன் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப்பிரச்னை நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாளாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். பணியாளர்களின் திறமை வெளிப்படும். அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வர். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்த வருத்தம் அகலும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் இடையூறு ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவர். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க பணவரவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 12, 13
அதிர்ஷ்ட நாள்: அக். 6, 7

சுவாதி:
அநியாயத்தை எதிர்க்கும் குணம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசியில் கேது இருந்தாலும் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருக்கிறார். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். அரசியல்துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: சனிபகவானுக்கு தீபம் ஏற்ற நிம்மதி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக். 13, 14
அதிர்ஷ்ட நாள்: அக். 7, 8

விசாகம் - 1, 2, 3:
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் உங்களுக்கு இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்க முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 18, அக். 14
அதிர்ஷ்ட நாள்: அக். 8, 9

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement