Load Image
dinamalar telegram
Advertisement

கன்னி : புரட்டாசி மாத பலன்

உத்திரம் - 2, 3, 4:
அன்பு பாசத்தை அனைவரிடமும் காட்டும் உங்களுக்கு இந்த மாதம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். திருமணம் சார்ந்த முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் தரும் போது கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் நற்செயல்களில் ஈடுபடுவர். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வணங்க குறை நீங்கும்.
சந்திராஷ்டமம்: அக். 10, 11
அதிர்ஷ்ட நாள்: அக். 4, 5

அஸ்தம்:
தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய உஙக்ளுக்கு இந்த மாதம் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். ராசியை குரு பார்ப்பதால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரவு நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். பணி தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப பிரச்னைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினருக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடம் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வர். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வர். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக். 11, 12
அதிர்ஷ்ட நாள்: அக். 5, 6

சித்திரை - 1, 2:
சீக்கிரமே அனைத்து விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய உங்களுக்கு இந்த மாதம் நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மீது இரக்கம் ஏற்படும். நீண்டநாளாக இருந்த பிரச்னை தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பலவழிகளிலும் பணவரவு இருக்கும். பணியாளர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச்செலவு அதிகரிக்கும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவர். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வர். கட்சி மேலிட ஆதரவால் கோரிக்கை நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பர். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பம் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவர். மாணவர்கள் திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவர். மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நிகழும்.
பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வர சகல தோஷம் நீங்கும்.
சந்திராஷ்டமம்: அக். 12, 13
அதிர்ஷ்ட நாள்: அக். 5, 6

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement