Load Image
Advertisement

மேஷம்: புரட்டாசி ராசி பலன்

அசுவினி: எதிலும் தனது முழு முயற்சியை மேற்கொள்ளும் உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுபபலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். பணியாளர்கள் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. குடும்பத்தினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதுாறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வர். சாமர்த்தியமானபேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்
பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்ற பிரச்னை தீரும்.

சந்திராஷ்டமம்: செப். 29
அதிர்ஷ்ட நாள்: செப். 23

பரணி: உலக ஞானம் உடைய உங்களுக்கு இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்து மூலம் வருமானம் வரும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு

விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட செல்வம் சேரும்.
சந்திராஷ்டமம்: செப். 30
அதிர்ஷ்ட நாள்: செப். 24

கார்த்திகை - 1: எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செய்யும் உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். சுபச்செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். பணியாளர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில்

திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்துார பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். கலைத்துறையினர் யாரிடமும் நிதானமாக பேசி பழகுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்ற கஷ்டம் தீரும்.
சந்திராஷ்டமம்: அக். 1
அதிர்ஷ்ட நாள்: செப். 24

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement