ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மூவர்ணக் கொடி கட்டப்பட்டுள்ளது.
ஆன்மீகத் தலத்தில் தேசபக்தி போற்றும் வகையில் ஆசாதிக் கா அம்ருத் மகோத்சவ் விழா ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நுழை வாயிலில் உள்ள பிக்க்ஷால கோபுரம் மீது 60 அடி உயரத்தில் தேசிய கொடியை கட்ட சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு. தாரக சீனிவாசலு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய கொடியை கோபுரங்கள் உட்பட கோயில் வளாகத்திலும் அதிக அளவில் ஏற்பாடு செய்ய உள்ளனர் . கோயில் தல வரலாறில் முதல் முறையாக கோபுரம் மீது தேசிய கொடியை ஏற்பாடு செய்ததால் மூவர்ணத்திலும் மின்விளக்குகள் அலங்காரத்திலும் மின்மினித்து ஜொலிப்பது அனைவரையும் கவரும் வகையில் கோயில் மாறியுள்ளது. குறிப்பாக பக்தர்களை கவரும் வகையில் சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளதாகவும் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கொண்டாடும் விழாவாகவும் , குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரே பண்டிகையாக சுதந்திர தின விழா என்றும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு .தாரக சீனிவாசலூ தெரிவித்துள்ளார்.