உத்தமபாளையம்: மகாலட்சுமி எழுந்தருளிய கோயில்களில் வரலட்சுமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரவலாக வீடுகளிலும் பெண்கள் வரலட்சுமி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை நடைபெறும். உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயில், கம்பம் கம்ப ராயப்பெருமாள் கோயில்களில் மகாலட்சுமி தாயாருக்கு வரலட்சுமி விரத நாளை முன்னிட்டு விசேச அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது , பல வீடுகளில் பெண்கள் வரலட்சுமி நோன்பு கயிறு கட்டி 48 நாள் விரதத்தை துவக்கினர். திருமணமான பெண்கள் கழுத்திலும், கன்னிப்பெண்கள் கைகளிலும் நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவக்கினார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்