Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நேற்று புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது. ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில், ஆகஸ்ட் 1 அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தேரோட்ட திருவிழா சிறப்புடன் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 06:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் திவ்யதம்பதியராக எழுந்தருளினர். பல்வேறு மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்பயாக பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புஷ்பயாகத்துடன் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement