Load Image
dinamalar telegram
Advertisement

ரத்தினமங்கலம் குபேர பகவான் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

சென்னை: வண்டலூர், ரத்தினமங்கலம், குபேர பகவான் கோயிலில் நாளை 3ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரனுக்கு என்று தனிக் கோயில் இருப்பது இங்கு மட்டும் தான். லட்சுமி குபேரன் கோயிலில், லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார்.

இங்கு நாளை 3ம் தேதி காலை 9.00 மணி்க்கு மேல் 11.00 மணிக்குள் குபேர பகவானுக்கும், சித்ரலேகாவிற்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற விருக்கிறது. ராஜலெட்சுமி குபேரா அறக்கட்டளை சார்பாக நடைபெறும் இந்த விழாவில், பக்தர்கள அனைவரும் பங்கேற்கலாம். லெட்சுமி குபேர உற்சவ மூர்த்தி செல்வ அலங்காத்தில் 7 ம்தேதி முதல் 24.08.22 வரை தமிழகம் முழவதும் உலா வருகிறார். இந்த லெட்சுமி குபேர உற்சவ மூர்த்திக்கு குபேர பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் 91760 06176 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement