Load Image
dinamalar telegram
Advertisement

மேஷம்: ஆனி மாத பலன்

அசுவினி: தனது விவேகத்தாலும் அனைத்து காரியங்க்ளையும் சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திரநாதன் கேதுவின் சார பலத்தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசாங்கம் ரீதியிலான உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த சுணக்க நிலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு - பணி இட மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
பரிகாரம்: ஸ்ரீமகாகணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டம தினம்: ஜூலை 10
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 21, 22

பரணி: கொடுக்கும் வாக்கை உயிருக்கு சமமாக மதிக்கும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திரநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். செயல்திறமை அதிகரிக்கும். தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். எந்த காரியங்களிலும் தோல்வி கிடைக்காமல் இருக்க திட்டமிடல் அவசியமாகிறது. தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை நீங்கள் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முடிவு கிடைக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு லாபகரமாக நடக்கும். அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
சந்திராஷ்டம தினம்: ஜூலை 11
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 22, 23

கார்த்திகை - 1: நிதானத்தால் காரியங்களில் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் மிக யோகமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி துரிதமாக கிடைக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் இருக்கும் மந்த நிலை இந்த காலகட்டத்தில் மாறும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. புதிய பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
சந்திராஷ்டம தினம்: ஜூன் 15, ஜூலை 12
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 23, 24

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement