Load Image
dinamalar telegram
Advertisement

மிதுனம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம்

மிருகசீரிடம் 3,4-ம் பாதம்: உற்சாகம் அதிகரிக்கும்

உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இதுவரை ராசிக்கு 12-ம் இடமான ரிஷப ராசியில் இருந்ததால் பண இழப்பையும், சில துன்பங்களையும் சந்தித்து இருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு ராசிக்கு 11-ம் இடமான மேஷத்திற்கு செல்வது நல்லது. அவரால் இதுவரை இருந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். அவர் இப்போது 5ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் பிரச்னையை தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் அதற்காக கவலைப்படத் தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பாக உள்ளதால் பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான பலனை காணலாம்

பொதுபலன்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். 2023 ஏப். 22க்கு பிறகு குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
தொழில்: தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 2023 ஏப். 22க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர்.

பணியாளர்கள்: மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சகஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள்: முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 2023 ஏப். 22க்கு பிறகு மறையும். அதன் பிறகு எதிர்பார்த்த புகழ், பட்டம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: நற்பெயர், செல்வாக்கு கிடைக்கப் பெறலாம். புகழ் வளர்ச்சி முகமாகவே இருக்கும். பணப் புழக்கத்தில் இருப்பர். சமூகநல சேவகர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள்: குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டு, கலை போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள்: நெல், உளுந்து, கொள்ளு, துவரை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். பக்கத்து நிலத்துக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள்: உற்சாகமாக காணப்படுவர். குடும்பத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். பண வரவு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்யும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 2023 ஏப். 22க்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.
உடல்நலம்: நோயிலிருந்து விடுபட்டு உடல் குணம் அடையும். பிள்ளைகளின் செயல்பாட்டால் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். சனிக்கிழமை பெருமாளை வழிபடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்குங்கள்.

திருவாதிரை: பெண்களால் நன்மை

உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இதுவரை ராசிக்கு 12-ம் இடமான ரிஷப ராசியில் இருந்ததால் பண இழப்பையும், சில துன்பங்களையும் சந்தித்து இருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு ராசிக்கு 11-ம் இடமான மேஷத்திற்கு செல்வது நல்லது. அவரால் இதுவரை இருந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். அவர் இப்போது 5ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் பிரச்னையை தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் அதற்காக கவலைப்படத் தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பாக உள்ளதால் பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான பலனை காணலாம்

இந்த பெயர்ச்சி காலத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். குருவின் பார்வையால் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம்.

தொழில்: கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் இருக்காது. அதிக வருமானத்தைக் காணலாம். குருவின் பார்வையால் பண வரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் 2023 ஏப்.22க்கு பிறகு ஒன்று சேருவர்.

பணியாளர்கள்: பணியிடத்தில் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதே பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

கலைஞர்கள்: முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாழ்வில் மேம்பாடு அடைவர். பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். பதவியும், பணமும் கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் வளர்ச்சி காண்பர். போட்டிகளில் வெற்றி காணலாம். 2023 ஏப்.22க்கு பிறகு ஆசிரியர்கள்,ஆன்றோர்கள் உதவி கிடைக்கும்.
விவசாயிகள்: நல்ல செல்வ வளத்தைக் காணலாம். பூமியில் விளையும் அனைத்து பொருள்களும் நல்ல மகசூலைத் தரும். உளுந்து, எள், பனைபொருள், மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கச் செய்வர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள்: சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். குரு மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். இருப்பினும் குருபகவானின் 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
உடல்நலம்: கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் மருத்துவச் செலவு அதிகம் உண்டாகாது.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். துர்க்கை வழியாடு செய்வதும் நன்மையளிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம்: மகிழ்ச்சிக்கு குறைவில்லை

உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இதுவரை ராசிக்கு 12-ம் இடமான ரிஷப ராசியில் இருந்ததால் பண இழப்பையும், சில துன்பங்களையும் சந்தித்து இருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு ராசிக்கு 11-ம் இடமான மேஷத்திற்கு செல்வது நல்லது. அவரால் இதுவரை இருந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். அவர் இப்போது 5ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் பிரச்னையை தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் அதற்காக கவலைப்படத் தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பாக உள்ளதால் பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான பலனை காணலாம்

பொதுபலன்:
பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. காரிய அனுகூலம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். தீயோர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் மனம் திருந்தி உங்களை நாடி வருவர்.
தொழில்:
லாபம் அதிகரிக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். ராகு பலமாக இருப்பதால் பண விஷயத்தில் எந்த கஷ்டமும் வராது.. தரகு, கமிஷன் தொழில் சிறப்பாக இருக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்கள்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. சிலருக்கு பணி, இடமாற்றம் ஏற்படலாம். 2023 ஏப். 22க்கு பிறகு வேலையில் இருந்த பிரச்னைகள் மறையும்.

கலைஞர்கள்: எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: பொதுவாழ்வில் நற்பலனைக் காணலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள்: உழைப்புக்கு தகுந்த நற்பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும். கலை, விளையாட்டுத்துறைகளில் ஆர்வம் காட்டுவர்.
விவசாயம்: வருமானத்திற்கு குறை இருக்காது. பாசிபயறு,நெல், கொள்ளு, கொண்டைக்கடலை,சோளம், மஞ்சள்,பழவகைகள் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கால்நடை வளர்ப்பில் கூடுதல் வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்,
பெண்கள்: அபார ஆற்றல் பிறக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம் கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருட்கள் வரப் பெறலாம். 2023 ஏப். 22க்கு பிறகு கன்னிப் பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும்.
உடல்நலம்: ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம்: முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். காளி வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement