Load Image
Advertisement

ரிஷபம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. கார்த்திகை 2-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ம் பாதம்

கார்த்திகை 2-ம் பாதம்: பொருளாதார வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் கிடைக்காமல் இருந்து வந்தீர்கள். இப்போது பெயர்ச்சி மூலம் நன்மை கிடைக்க உள்ளது. தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். இதுவரை அவர் 7ம் இடமான விருச்சிகத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6ம் இடமான துலாம் ராசிக்கு வருவதன் மூலம் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும்.

கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலன் தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம் மாறி 12ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துாரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான பலன்களைக் காணலாம்.

பொதுபலன்: காரிய அனுகூலம் ஏற்படும். மனதில் உற்சாகம் பிறக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் விடாமுயற்சியால் புதியவீடு கட்டுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். 2023 ஏப். 22க்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய காரியங்களை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

தொழில், வியாபாரம்: லாபம் அதிகரிக்கும். பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. குருவால் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். ஆனாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு லாபம் காண அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேற வழிவகை காண்பது நல்லது.

பணியாளர்கள்: வேலைபளுவில் இருந்து விடுபடுவர். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெறுவர். மனதில் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். புதிய பதவி, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது.

கலைஞர்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். காரியத்தடை, பொருள் நஷ்டம், அவப்பெயர் முதலியன மறையும். முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். 2023 ஏப்.22க்கு பிறகு கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள்: முன்னேற்றம் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதியுடன் வாழ்வர். சேமிப்பு அதிகரிக்கும். கூலிவேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதி அனுமனை வணங்குங்கள்.

ரோகிணி: முயற்சியில் வெற்றி

கடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் கிடைக்காமல் இருந்து வந்தீர்கள். இப்போது பெயர்ச்சி மூலம் நன்மை கிடைக்க உள்ளது. தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். இதுவரை அவர் 7ம் இடமான விருச்சிகத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6ம் இடமான துலாம் ராசிக்கு வருவதன் மூலம் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலன் தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம் மாறி 12ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துாரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான பலன்களைக் காணலாம்.
பொதுபலன்: இது மிகவும் சிறப்பான காலகட்டம். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். குருவின் 7, 9ம் இடத்துப் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
தொழில் வியாபாரம்: வளர்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுணர்வுடன் இருப்பர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். கோவில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள், வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும்.

பணியாளர்கள்: பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெறுவர்.

கலைஞர்கள்: சிறப்பான வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: செல்வாக்குடன் திகழ்வர். சமூகநல சேவகர்கள் வளர்ச்சி அடைவர். முக்கிய பதவி, பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்: குரு சாதகமாக இருப்பதால் வளர்ச்சி உண்டாகும். அனுகூலமான சூழ்நிலை உருவாகும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். காலர்ஷிப், ஊக்கத்தொகை, பரிசு போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: பாசிபயறு,கொள்ளு,நெல், மஞ்சள்,கொண்டைக் கடலை, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் காண்பர். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
பெண்கள்: மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
உடல்நிலை: உஷ்ணம்,தோல் தொடர்பான நோய்கள் மறையும். மருத்துவச் செலவு குறையும்.
பரிகாரம்: திருநாகேசுவரம், கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி போன்ற ராகு,கேது தலங்களுக்குச் சென்று வரலாம். நாக தேவதையை வணங்குவது நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். 2023 ஏப். 22க்கு பிறகு வியாழன்தோறும் குரு பகவானுக்கு முல்லை மலர் சாத்தி வணங்குங்கள்.

மிருகசீரிடம் 1,2-ம் பாதம்
............
பொன், பொருள் சேரும்

கடந்த சில ஆண்டுகளாக ராகு, கேதுவால் எந்தவித நற்பலனும் கிடைக்காமல் இருந்து வந்தீர்கள். இப்போது பெயர்ச்சி மூலம் நன்மை கிடைக்க உள்ளது. தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். இதுவரை அவர் 7ம் இடமான விருச்சிகத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6ம் இடமான துலாம் ராசிக்கு வருவதன் மூலம் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். அவரது பின்னோக்கிய 4ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் மனதில் பக்தி எண்ணம் அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலன் தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம் மாறி 12ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துாரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். இனி விரிவான பலன்களைக் காணலாம்.
பொதுபலன்: குடும்பத்தில் குதுாகலம் காணப்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். பொருளாதார வளம் மேம்படும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பிரச்னைகள் மறையுள். பிரிந்து இருந்த உறவினர்கள் ஒன்று சேருவர். 2023 ஏப். 22க்கு பிறகு தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
தொழில், வியாபாரம்: கூடுதல் வருமானத்தை காணலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். எந்த தொழிலிலும் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டாம். 2023 ஏப். 22க்கு பிறகு எதிரிகளால் இடையூறு வரலாம். அரசு வகையில் உதவி கிடைப்பதில் தாமதமாகலாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டியது வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்கவும்.
பணியாளர்கள்: பணியில் முன்னேற்றம் காண்பர். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்: பாராட்டு, பரிசு, விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். சமூகத்தில் நல்ல அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
மாணவர்கள்: கல்வியில் சிறப்பான நிலையை காணலாம். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும். 2023 ஏப். 22க்கு பிறகு ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்கவும்.
விவசாயிகள்: எதிர்பார்த்ததை விட கூடுதல் மகசூலை பெறுவர். நெல், சோளம், பயறு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்கள்: வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உங்களை புரிந்து கொள்ளாத உங்கள் குடும்பத்தினர் இனி படிபடியாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். மனத்தளர்ச்சி மறையும். உஷ்ணம், தோல், தொடர்பான உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஞானிகள், சன்னியாசிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். 2023 ஏப். 22க்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

Advertisement
Advertisement
 
Advertisement