ராமேஸ்வரம்: ஜன., 31 தை அமாவாசை அன்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி, தரிசிக்கலாம். கொரோனா பரவலை தடுக்க கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் தரிசிக்க தமிழக அரசு தடை விதித்தது. இத்தடை வரும் 30ம் தேதியுடன் முடிவதால், அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தடையை அரசு நீக்கியது. இந்நிலையில் தை அமாவாசையான ஜன., 31ல் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராட தடை இல்லை. எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைபடி பக்தர்கள் தாராளமாக நீராடி, கோயிலில் தரிசிக்கலாம் என ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.