Load Image
dinamalar telegram
Advertisement

வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி சிறப்பு பூஜை

திருநெல்வேலி: பாளை அரியகுளம் மேலக்குளம் வாராகி அம்மன் கோயிலில் இன்று (8ம் தேதி) பஞ்சமி பூஜை நடைபெற்றது. பாளை அரியகுளம் மேலக்குளத்தில் வாராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பல லட்சரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. வாராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான இன்று (8ம் தேதி) சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம், அதைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ராஜாமணி சிவாச்சாரியார் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement