dinamalar telegram
Advertisement

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.65 லட்சம் காணிக்கை

Share

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 12 நிரந்தர உண்டியல்கள், ஒன்பது தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி தலைமை வகித்தார். கோவில், தக்கார் விமலா, ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையாளர் ஆனந்த் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.நிரந்தர உண்டியல்களில், 46 லட்சத்து, 70 ஆயிரத்து, 145 ரூபாயும், தட்டுக்காணிக்கை உண்டியல்களில், 18 லட்சத்து, 33 ஆயிரத்து, 317 ரூபாய் வசூலாகியது. 195 கிராம் தங்கம் மற்றும் 497 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement