dinamalar telegram
Advertisement

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

Share

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5ம் நாளான இன்று (8ம் தேதி) நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து 5- ம் நாள் இன்று (8ம் தேதி) நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement