dinamalar telegram
Advertisement

சென்னை, திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப யாகம்

Share

சென்னை: தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புஷ்ப யாகம் விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வெங்கடேச பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்கு பின், உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதேமுறையில் , சென்னை , தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புஷ்ப யாகம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேவஸ்தான தகவல் மையத்தில் நேற்று மாலை 5:30 மணி முதல் புஷ்ப யாகம் துவங்கியது.

வேதபண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க , துளசி, சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, நித்யமல்லி, ஜாதிமுல்லை, மருவு, த வனம், தாமரை, விருச்சிப்பூ; மனோரஞ்சிதம், சண்பகம், ரோஜா, மகிழம், தாழம்பூ ஆகிய மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வெங்கடேசபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் , திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement