dinamalar telegram
Advertisement

சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் புரட்டாசி வழிபாடு நிறைவு

Share

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில், சங்கர நாராயணருக்கு நேற்று (16.10.2021) புரட்டாசி மாத நிறைவு நாள் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு.நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கர நாராயணர் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இன்றைய பூஜை இறைப் பணியில் சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாத்தினர். பக்தர்களுக்கு புளியோதரை, சுண்டல், பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பூசாரி செல்வம், அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement