Load Image
Advertisement

உப்பிலிபாளையம் அகத்திய மகரிஷி கோவிலில் கும்பாபிஷேகம்

கோயம்புத்தூர் : உப்பிலிபாளையம் அகத்திய மகரிஷி கோவிலில் 19.09.21ம் தேதி அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
உப்பிலிபாளையம், காமராஜர் ரோடு, L. ராமசாமி நகர், kG கார்டன் ஸ்ரீ வர சித்தி பாரின் விநாயகர், ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ அகத்திய மகரிஷி கோவில் வளாகத்தில் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஸ்ரீ ராம பக்த ஆ ஞ்சனேயருக்கு மூலம் நட்சத்திரத்தன்று மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தினசரி மாலை 6.30 மணிக்கு மண்டல பூஜையும் தொடர்ந்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 18.09.21ம் தேதி யாக சாலை ஹோமத்துடன் கலச பூஜை மற்றும் ஸ்ரீ கோமாதா, ஸ்ரீ காமதேனு, சிவலிங்கம், நந்தி மற்றும் மகமேரு சிலைகள் பிரதிஸ்டை நடை பெற்றது. இதனை தொடர்ந்து 19.09.21ம் தேதி அன்று யாகசாலை ஹோமத்துடன் கலச பூஜை மற்றும் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த கோவிலின் சிறப்புகள்:

1)20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோவில் அருகில் வசிக்கும் குடியிருப்பு உரிமையாளர்களில் குழந்தைகள் இன்று நல்ல கல்வி கற்று 35 நபர்கள் வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கப்பெ ற்று வெளிநாடுகளில் வசிப்பதால் இந்த ஸ்ரீ வர சித்தி விநாயகர் இப்பகுதி மக்கள் ஸ்ரீ வர சித்தி பாரின் விநாயகர் என்றே அழைத்து கோவையில் ஒரு பாரின் விநாயகர் என பெரும் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.

2)கிழக்கு பார்த்த ஸ்ரீ வர சித்தி பாரின் விநாயகர் தெற்கில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மேற்கில் ஸ்ரீ முருகன் வடக்கில் ஸ்ரீ துர்க்கை அம்மன் என சக்திவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது.

3) இந்த பாரின் விநாயகர் கோவில் வடக்கில் சுமார் 40அடி உயரத்திற்கும் மேலான அரச மரத்தின் கீழ் கிழக்கு நோக்கிய விருட்ச விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

4)இந்த விருட்ச விநாயகர் முன்பாக அவரது பார்வையில் நவகிரகங்கள் அமைந்துள்ளது.

5)இந்த நவகிரகங்களுக்கு வடக்கே கிழக்கு பார்த்த ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், அதில் வடக்கு பார்த்த ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன் என கடந்த 6மாதங்களுக்கு முன்னதாக கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடத்தி சிறப்பான அபிஷேகம், பூஜை அலங்காரம் என இப்பகுதி மக்களிடயே பிரபலமடைந்து வரும் கோவில் ஆக உள்ளது.

6)4மாதங்களுக்கு முன் 8வடிவ ராசி செடிகள் நடை வல ஆன்மீக தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.12 ராசி செடிகளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் 16முறை சுற்றி நடந்து நோய் எதிர்ப்பு சக்தி மன அமைதி பெற்று நல்ல ஆரோக்கியம் பெரும் விதமாக சிறு பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது நல்லதொரு முன்னுதாரண முயற்சி என எல்லோராலும் வெகுவாக பாராட்டப்படுகிறது. இணைப்பு.. நடை வல பலன் விபரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது .

7)அரசமரம், வேப்ப மரம், வில்வ மரம் என ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது இறை சக்தியை அதிகபடுத்தி கொண்டே உள்ளது.

8)கடந்த 22/08/21 அன்று இக்கோவில் நவக்கி ரகங்களுக்கும் 8 வடிவ ராசிசெடிகள் நடைவல தோட்டத்திற்கும் இடையில் கிழக்கு பார்த்து ஸ்ரீ அகத்திய மகரிஷி சிலை 5 1/4 அடி உயரத்தில் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தில் பிரதிஸ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தற்போது தினசரி மாலை 6.30 மணியளவில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

9)19/09/21 அகத்தியரின் நேர் பார்வையில் கன்றுடன் கோமாதா மற்றும் சிவலிங்கம் நந்தி இதற்கு மேல் காமாதேனு இதன் அருகில் மகமேரு என சிலை பிராதிஸ்டை செய்து கும்பாபிஷேகம் என சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அகத்திய மகரிஷி நேர் பார்வையில் காய்த்து குலுங்கும் வில்வ மரத்தின் கீழ் இச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தியானம் செய்ய மிகவும் ஏற்ற வகையில் அழகிய வண்ணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்.

10)விநாயகர், அகத்திய மகரிஷி, ராம பக்த ஆஞ்சநேயர் கோமாதா, காமதேனு உடன் 8 வடிவ ராசி செடிகள் நடை வலம் அமைந்துள்ள கோவில் இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை. எனவே அழகும் அமைதியும் அருளும் நிறைய உள்ள இக் கோவிலுக்கு குடும்பத்துடன் வருமாறு அன்புடன் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்கிறோம்

11)இங்குள்ள நவகிரகங்கள் அதன் நான்கு புறங்களிலும் விநாயகர், ஆஞ்சநேயர், அகத்திய மகரிஷி என இறை சக்திகள் சூழ்ந்துள்ள நிலையில் உள்ளதால் இந்த நவக்கி ரகங்களை சுற்றி வரும் பக்தர்களின் பிரச்சனைகள் உடனே தீர்வதை உங்கள் அனுபத்திலும் உணரலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement