மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளதாவது:இக்கோயில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் தவறான தகவல்களுடன் திருவிழா நாட்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாலோ, யூடியூப் சேனல்களில் தெரிவித்தாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.