காரைக்கால்: காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை தினந்தோறும் வாசிக்கப்பட்டு சொற்பொழிவும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நடந்தது. உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு ஆண்டாளுடன் ஏகாசனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களின் குடும்பத்துடன் சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். மேலும் விடையாற்றி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.