காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி மிகவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டியது . காணும் பொங்கலையொட்டி சனீஸ்வரபகவான் கோவில். நித்தியகல்யாண பெருமாள் கோவில். அம்பகரத்தூர்.திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி காரைக்கால் கடற்கரையில் பிற்பகல் முதல் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் தங்கள் குடும்பத்துடன் கடற்கரையில் ஒன்று திரண்டனர். இதில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களை மற்றும் மதிய உணவு எடுத்து வந்து கடற்கரையில் அருந்திய பின் காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.மேலும் சிறுவர்கள் சறுக்குமரம்.பட்டம் விடுதல் மற்றும் கடற்கரை மணலில் அனைவரும் ஒன்று திரண்டு விளையாடி காணும் பொங்கலை சந்தோஷமாக கொண்டாடினர்.பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி எஸ்.பி.வீரவல்லபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரை பகுதியில் கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் போலீசார் படகுகள் முலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் காணும் பொங்கல் விழா: கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.