கூடலூர்: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரணயம் யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் இம்முகாம்களில் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று, மாலை தெப்பகாடு யானைகள் முகாமில் நடந்தது. அதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து வரிசையில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து விநாயகர் கோவிலில் பூஜை செய்து, யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன், பொங்கல், பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கபட்டன. விழாவில், வனச்சரகர்கள் தயாரந்தன், மனோஜ்குமார், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், வனவர் சந்தன்ராஜ், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
யானைகள் முகாமில் பொங்கல் விழா: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.