திருவாவடுதுறை: அதுல்ய குஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயில் தைபெருவிழா 5ம் நாளில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பொற்கிழி பெற்ற ஐதீக விழா கோயிலில் நடந்தது. திருஞானசம்பந்தர் பல்லக்கில் எழுந்தருள பொன் உலாவக்கிழி பதிகம் பாடப்பட்டது. அப்போது சிவ பூதகணம் பொற்கிழியை எடுத்து வந்து பலிபீடத்தில் வைக்க அதனை திருஞானசம்பந்தப் பெருமான் பெறும் நிகழ்ச்சி மகா தீபாராதனையுடன் நடந்தது. நிகழ்ச்சியில் முத்துக்குமார் ஓதுவார், வடுகநாதன் ஓதுவார், அசோக்குமார் ஒதுவார் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழி மற்றும் தெய்வ தமிழிசை செல்வர் எனும் சிறப்பு விருதினை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். இரவு தியாகராஜப் பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள அம்பாள் தாம் பெற்ற பசு வடிவத்தை நீக்கி அருள வேண்டி கோமுக்தீஸ்வரரை பூஜிக்கும் நிகழ்ச்சியும், ரிஷப வாகனத்தில் சகோபுரம் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.
கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பொற்கிழி பெற்ற ஐதீக விழா
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.