நேபிடா: மியான்மரில் புத்த துறவி ஒருவர் பாம்புகளை தன் பிள்ளைகளைப் போல் பாவித்து வளர்த்து வருகிறார்.
69 வயதாகும் இந்த துறவி கடந்த 5 வருடங்களாக மலைப்பாம்புகள், மற்றும் விஷம் கொண்ட நல்ல பாம்புகள், கட்டுவிரியன் போன்றவற்றை யாங்கூனில் உள்ள தனது ஆசிரமத்தில் வளர்த்து வருகிறார். பொது மக்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் தீயணைப்பு வீரர்கள் தங்களிடம் பிடிபடும் பாம்புகளை இவரிடம் கொடுத்து வருகின்றனர். இவர் தான் வளர்க்கும் பாம்புகளை சிறிது காலம் கழித்து காட்டில் விட்டு விடுகிறார். ஆனால், அவை மறுபடியும் வியாபார நோக்கத்திற்காக பிடிபடக்கூடும் என்று கவலை தெரிவித்தார். பாம்புகள் கொல்லப்படுவதை தடுப்பதற்காகவும், சீன பாரம்பரிய வைத்தியத்திற்காக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய அவை கடத்தப்படுவதை தடுக்கவும் இவ்வாறு செய்வதாக தெரிவிக்கும் சிறிதும் பயமின்றி பாம்புகளை தன் தோளில் போட்டுக் கொள்கிறார்.
பாம்புகளை தன் பிள்ளைகளைப் போல் பாவித்து வளர்க்கும் புத்த துறவி
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.