கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கரூர், அலங்காரவல்லி சவுந்திரநாயகி உடனாகிய, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கடந்த இரண்டு மாதங்களாக புனரமைக்கும் பணி, கோபுரங்கள், சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. கடந்த, 29ல் கணபதி யாகத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலை, நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு ஆறாம் யாக கால பூஜை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் அனைத்து விமானங்கள், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.